நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், நீரின் தேவை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், வரையறுக்கப்பட்ட நீரை நிர்வகிக்க வேண்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்திக்கு நீரை திறந்து விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்களைப் பாதுகாக்க நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இலங்கையில் போதிய மழையைப் பெறவில்லை.

ஆண்டுதோறும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பதிவாகும்.

மேலும், வறட்சி காரணமாக உடவலவ நீர்த்தேக்கம் உட்பட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...