இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Date:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதுதொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் அவர் 5 ஆண்டுகள் அரசியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்தது தொடர்பான வழக்கிலேயே அந்நாட்டு நிதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தன் மீதான குற்றச்சாட்டை இம்ரான் கான் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...

இன்று முதல் மின்சார சபையில் மாற்றம்

இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6...

தேசிய நலன் கருதி PSTA-வைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் 14 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்!

(தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்....