அனைத்து உணவுகளின் விலைகளும் அடுத்த சில தினங்களுக்குள் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
ஏற்கனவே உணவகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உணவுகளின் விலைகளை மீண்டும் அதிகரிப்பதால், இந்த நஷ்டம் மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம்.
அப்படி நடந்தால், உணவகங்களை மூடிவிட நேரிடும் எனவும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த கழிவறை வசதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதனையும் நிறுத்த நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் மேலும் கூறியுள்ளது.