இலங்கை – இந்திய ஒப்பந்தம் போன்று முஸ்லிம்களின் முதுகில் இன்னுமொரு அடிமைச் சாசனத்தை எழுதுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமஸ்டி என்று எது முன் வைக்கப்பட்டாலும் அதில் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்றால் அவற்றை நாம் வரவேற்பதற்கு தயாராகவே இருக்கிறோம்.
முஸ்லிம்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், சுற்றாடல் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதே வேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லிம்களின் அபிலாசைகளை எந்த விதத்திலும் கருத்திற் கொள்ளாமலும் உள்ளார்கள்.
வடக்கும், கிழக்கும் இணைந்திருந்த போது முஸ்லிம்களுக்கு பல அநீதிகள் நடைபெற்றுள்ளன. முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டன. வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
மொத்தில் இணைந்த வடக்கு, கிழக்கு நிர்வாகத்தில் முஸ்லிம்களை அடிமைப்படுத்தும் செயற்பாடுகளே நடைபெற்றன.
ஆகவே, இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசனம் என்று தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 34 வீதமாக இருந்த முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் வடக்கு, கிழக்கு இணைப்பால் 17 வீதமாக மாற்றப்பட்டது.