பெருந்தோட்டத்துறை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம்!

Date:

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான அவ நம்பிக்கை பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இதற்கான திகதியினை சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை இந்த வாரத்தில் விவாதிப்பதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பெருந்தோட்டத்துறை தொடர்பான விவாதம் இந்தவாரம் இடம்பெறவுள்ளதால் இதற்கே பிரதான முக்கியத்துவத்தை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு மற்றும் சர்ச்சைக்குரிய மயக்க மருந்து உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக அவ நம்பிக்கை பிரேரணையை முன்வைத்துள்ளது.

இதேவேளை பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அவர்களது அரசியல், பொருளாதார, சமூக, பின்னடைவுகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...