சிபெட்கோ விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் தீர்மானம்!

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் குறைத்து விற்பனை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த கோரிக்கைக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்னும் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சினோபெக்கிற்கு இலங்கையில் 130 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 20 எரிபொருள் நிலையங்களை சினோபெக்கிற்கு வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சினோபெக் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...