இந்தியா மறறம் பூட்டானுக்கு இடையே சர்வதேச ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ்விடயத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். “இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்கும், இந்தியாவிற்கும் இடையேயான ரயில் சேவை இந்தியாவில் அசாமிலிருந்து இயக்கப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான சுற்றுலா புள்ளிகளை அதிகரிக்க பூடான் மிகவும் ஆர்வமாக உள்ளது.