மன்னாரில் கடும் வறட்சி!

Date:

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டத்தில் சிறுபோக செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள், தோட்ட செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக மழை இன்மையால் மன்னார் மாவட்டத்தில் நீர் நிலைகளில் நீரின் அளவு முழுமையாக குறைவடைந்துள்ளது.

அதே நேரம் சிறிய குளங்கள் கால்வாய்கள் முற்றாக வறண்டு போய் உள்ளது.

குறிப்பாக கடந்த மாதம் மன்னார் மாந்தை பகுதியில் சிறுபோக பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளின் நெற் செய்கையும் கருகியுள்ளதுடன் கத்தரி,கச்சான் போன்ற தோட்ட செய்கைகளும் முற்றாக பாதிப்படைந்துள்ளது.

அதே நேரம் கால்நடைகளும் விலங்குகளும் குடி நீர் இன்றி இறக்கும் சம்பவங்கள் காணக்கூடியதாக உள்ளது.

இன்னும் சில பகுதிகளில் வறட்சி காரணமாக கிணற்று நீரும் வற்றி  உள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...