புத்தளத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களின் சிறு கைத்தொழில் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி!

Date:

புத்தளம் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் முதன் முறையாக நடாத்தப்பட்ட சிறு கைத்தொழில் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையும் (11,12) புத்தளம் நகர மண்டபத்தில் காலை 09.30 தொடக்கம் இரவு 09.00 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கண்காட்சியில் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களான உணவு பொருட்கள், திரை அச்சு (Screen printing) உணவு பதப்படுத்தல், பத்திக் பைகள் (Batic bags), ஆயுர்வேத சவர்க்காரங்கள், சலவைத்தூள், கை கழுவும் திரவியம் (Handwash), எபொக்சி ரேசின் (Epoxy resin ) இனால் தயாரிக்க கூடிய ஆபரணங்கள், அழகு சாதன பொருட்கள், தென்னை பாகங்களினால் உற்பத்தி செய்யப்படும் ஆபரணங்கள், தும்பினால் தயாரிக்கப்படும் பாபிஸ், தேங்காய் சிரட்டையினால் செய்யக்கூடிய ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள் மற்றும் தேங்காய் பால், தேங்காய் துருவலினால் தயாரிக்கக் கூடிய உணவு வகைகள், உடனடியாக தயாரித்து வழங்கும் உணவுகள் ஆகிய உற்பத்திகள் சந்தைப்படுத்தப்பட்டன.

இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட செயலாளர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (IDB) பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்,தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம், பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சேவை செய்துவருகின்ற அரச சார்பற்ற நிறுவனமாகும்.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 வருடங்களுக்கும் மேலாக சேவை வழங்கி வருகின்றது.

பெண்களின் பொருளாதாரத்தினை அதிகரிப்பதன் மூலமாக அவர்களை வன்முறைகளிலிருந்து பாதுகாக்கலாம் என்பதனை நோக்கமாகக் கொண்டு “பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதனூடாக பெண்களின் உரிமையை பாதுகாத்தல்” எனும் திட்டம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகாரியாலய நேரடி உதவி நிகழ்ச்சித்திட்ட (DAP) நிதி அனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் முன்னேற முயற்சிக்கும் பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காக புத்தளம் மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், நாளாந்த கூலி தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களில், 100 பெண்களை தெரிவுசெய்து அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை வழங்கியதோடு கணக்கீடு, முகாமைத்துவம் மற்றும் பொதியிடல் பயிற்சியும் வழங்கப்பட்டது.

மேலும் தொழிலை பதிவு செய்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் பிரதான அம்சமாக பயிற்றுவிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து “PROMISE” என்ற வலையமைப்பு உருவாக்கப்பட்டு அதனை அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...