வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக யால குளங்கள் பவுசர் தண்ணீரால் நிரப்பப்படுகின்றன!

Date:

தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை யால தேசிய பூங்காவையும் பாதித்துள்ளதால் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பௌசர்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு சிறிய குளங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யால தேசிய பூங்கா ஊடாக பாயும் மெனிக் ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு பௌசர்கள் மூலம் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீர் தேவைப்படும் இடங்களுக்கு நிரப்பப் படுகிறது.

மேலும் பூங்காவில் உள்ள வறண்டு கிடக்கும் தொட்டிகளுக்கு சோலார் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது.

யால தேசிய பூங்காவிற்கு தற்போது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், எனவே சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளைப் பார்ப்பதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளாந்த வருமானம் 80 இலட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...