தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல பிரிவினர் கலந்து கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தால், தேவையான டெண்டர் கோரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட மின்சாரம் தடைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொது மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.