13 ஆம் திருத்தத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் பதியப்பட வேண்டும்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முதலாவது தேசிய தலைமைத்துவ சபை அமர்வில் தீர்மானம்

Date:

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய தலைமைத்துவ சபை உறுப்பினர்களுக்கான முதலாவது சபை அமர்வு நேற்று முன்தினம் (12) காத்தான்குடியில் நடைபெற்றது.

இதன்போது நடைபெற்ற ஊடக சந்திப்பில் NFGGயின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி மற்றும் பிரதி தவிசாளர் பொறியியலாளர் MM அப்துர் ரஹ்மான் ஆகியோர் விளக்கமளித்தனர்.

கட்சியின் தேசிய தலைமைத்துவ சபை தெரிவு பற்றிய விளக்கமளிக்கப்பட்டதோடு காத்தான்குடியில் அமைக்கப்படவுள்ள சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய Pyrolysis திட்டத்தின் பாதகமான விளைவுகளும் மாற்றீடுகளை கைக்கொள்ள வேண்டியதன் அவசியமும் எடுத்துக் காட்டப்பட்டது.

தேசிய ரீதியில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டிருக்கின்ற அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மைகளும் அதனால மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நம்பிக்கையீனங்களும் இந்த ஊடக மாநாட்டில் சுட்டிக் காட்டப்பட்டதோடு நாட்டின் தற்போதைய பேசு பொருளாக மாறி இருக்கின்ற 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் மற்றும் முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடுகள் பதிவு செய்யப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு அதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எடுத்து வருகின்ற முனைப்புகளும் எடுத்துக் கூறப்பட்டன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ வருடாந்த பொதுச்சபைக்கூட்டமும் தலைமைத்துவ சபைத் தெரிவும் ஜூலை 22 இல் நடைபெற்றபோது NFGGயின் எதிர்வரும் 4 ஆண்டுகளுக்கான தேசிய தலைமைத்துவ சபை உறுப்பினர்களின் தெரிவும் இடம்பெற்றிருந்தது.

குறித்த தினம் தெரிவு செய்யப்பட்ட தேசிய தலைமைத்துவ சபை உறுப்பினர்களுக்கான முதலாவது சபை அமர்வும் கலந்துரையாடலும்
நேற்று முன்தினம் (12) காத்தான்குடி NFGG தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்களின் பதவி நிலை தெரிவுகளும் இடம்பெற்றன.

பதவி வழி உறுப்பினர்களாக கீழ் வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கௌரவ தவிசாளர்: Dr. KM. ஸாஹிர்
கௌரவ பிரதி தவிசாளர்: Eng. MMM. அப்துர் ரஹ்மான்.
பொதுச் செயலாளர்: அஷ்ஷெய்க். ALM. ஸபீல் நளீமி .
பிரதி பொதுச் செயலாளர் : அல்ஹாஜ் SHM. பிர்தௌஸ் ஆசிரியர்.
பொருளாளர் : அஷ்ஷெய்க். MJM. மன்சூர் .
உப பொருளாளர் அல்ஹாஜ் PMM. இர்ஷாத்.
தேசிய அமைப்பாளர் PM. முஜீபுர் ரஹ்மான், LL.B
ஊடக செயலாளர்: திருமதி பஹ்மியா ஷரீப்.
இளைஞர் விவகார இணைப்பாளர்கள்
1. AMM. பர்ஸாத்
2. நபீஸா அப்துல் வாஹித்
தேசிய தலைமைத்துவ சபை உறுப்பினர்களாக,
அஷ்ஷெய்க் MIM. மஸீன்
அஷ்ஷெய்க் AGM.நதீர் (நளீமி)
ALM. அஹ்சன் ஆசிரியர்
MM. நசூர்டீன்
AW. சப்(f)ரி
MLM.லாபிர் ஆசிரியர்
MHM.ஹனான்
UL.றபீக்
அஷ்ஷெய்க் AM.ரிஸ்மி
MACM.முஹ்சின்.
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...