மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு தொகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெஹியத்தகண்டி ஷாலிகா நகர மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் குறித்த மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உணவாக உரிமங்கள் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நிலையில், மக்கள் மது அருந்துவதை எவ்வாறு நிறுத்தமுடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.