மலேசியாவில் விமான விபத்து : 10 பேர் உயிரிழப்பு!

Date:

மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.

இதில் இரு விமானிகள் உட்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதனால் அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானி முயன்றுள்ளார். அதன்படி சிலாங்கூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தார்.

இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு விமானம் தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது.எனவே தீயை அணைப்பதற்காக அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

பின்னர் இடம்பெற்ற மீட்புப்பணியில் விமானத்தில் பயணித்த 8 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...