இலங்கையில் மாரடைப்பினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்வு!

Date:

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாகுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“கடந்த 10 வருடங்களில் இலங்கையில் இதய நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 166 – 170 பேர் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். தற்போதைய தரவுகள் அதைத்தான் எமக்கு காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக அந்த அதிகரிப்பு தினமும் நோயாளர்களை பரிசோதிக்கும் போது மேல் மாகாணத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளும் எங்களிடம் இருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அந்த தரவுகளை பார்க்கும் போது கடந்த காலங்களில் இதயநோய்களின் போக்கு அதிகரித்து வருவதை காணலாம்.” என கூறினார்.

இதய நோயாளிகளின் அதிகரிப்புக்கு உணவுப் பழக்கத்தில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணம் என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நமது வாழ்க்கை முறையால் மாரடைப்பு அதிகரித்துள்ளது. நமது வாழ்க்கை முறையின் மாற்றத்தால், குறிப்பாக நாம் உண்ணும் உணவில் பெரிய மாற்றம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவை வேகமாக மாறிவிட்டன. நாம் உண்ணும் மற்றும் குடிக்கும் முறை, நமது வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது .உண்மையில் இலங்கையில் மாரடைப்பு அதிகரிப்பதற்கு அந்த வித்தியாசமே காரணம். குறிப்பாக நாம் உண்ணும் உணவில் உள்ள சீனியின் அளவு மிக அதிகமாக உள்ளது. இலங்கையில் ஒருவர் வருடத்திற்கு சுமார் 30 கிலோ சர்க்கரையை உட்கொள்கிறார். . மற்றொன்று, நம் உணவின் பெரும்பகுதிக்கு எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். உண்ணப்படும் பெரும்பாலான உணவுகள் கார்போஹைட்ரேட் ஆகும், அதாவது உணவு முக்கிய காரணியாகும்.” என அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...