மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள் மீது பலகையால் சரமாரி தாக்குதல்!

Date:

தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற இரு ஊழியர்களை  பலகையால் குறித்த வீட்டின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.

இது தொடர்பிலான முறைப்பாடொன்றும் தற்போது தலாவ பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (21) கெக்கிராவ தலாவ ஜயகங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருவர் இந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க வந்துள்ளனர்.

பின்னர்,  அன்றைய தினம் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துவதாக  அந்த வீட்டின் உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால், மின்சார அதிகார சபையிலிருந்து உரிய உத்தரவு வந்துள்ளதால், மின்வெட்டை கட்டாயம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி, குறித்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க முற்பட்ட போது, ​​அதனைக் கேட்காததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரின் மகன், அருகில் இருந்த நாய் கூரை மீது இருந்த பலகையால் மின்சாரத்தை துண்டிக்க முயன்ற நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும், அந்த சம்பவத்தின் போது எடுக்கபட்ட காணொளியும் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...