இலங்கை விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் புகழாரம்!

Date:

அமெரிக்காவின் பொறியியல் பேராசிரியரும்,விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வு கூடத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான இப்ராஹிம் ஜவாஹிர் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது எமக்குப் பெருமையைத் தருகிறது.

சர்வதேசத்தில் பல முக்கிய விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள இவர் அமெரிக்காவில் ‘அமெரிக்க இயந்திர பொறியியலாளர் சமூகம்’ இற்கான (The American Society of Mechanical Engineers) 2023ம் ஆண்டுக்கான சிறந்த விருதையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சு போன்ற முக்கியமான நிறுவனங்களுக்கு பல மில்லியன் டொலர் செலவிலான திட்டங்களை (Projects) நிறைவேற்றிக் கொடுத்து தனது பல்கலைக்கழகத்துக்கும், ஆராய்ச்சி நிலையத்துக்கும் பாரிய வருமானத்தையும் பெருமையையும் அவர் தேடிக்கொடுத்துள்ளார்.

உலகில் உள்ள பல முன்னணி பல்கலைக் கழகங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதுடன் அங்கு பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார். இவர் பொறியியல் முதுமாணி மாணவர்களுக்கான பல ஆராய்ச்சிப் புத்தகங்களை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது பெற்றோர் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது பிள்ளைகளை வளர்த்தார்கள். தந்தை இப்ராஹீம் ஸாஹிப் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டியையும் தாய் பாத்திமா பீவி அனுராதபுர மாவட்ட நாச்சியாதீவையும் பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர்.

பேராசிரியர் ஜவாஹிர் அவர்களது சகோதரரான இப்ராஹீம் அன்ஸார் அவர்கள் எகிப்து, மலேசியா, சவூதி அரேபியா,ஓமான் ஆகிய நாடுகளில் இலங்கை நாட்டின் தூதுவராக கடமையாற்றியிருப்பதுடன் சிறிது காலம் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

முன்னை நாள் தூதுவர் இப்ராஹீம் அன்ஸார் தனது குடும்பத்தின் நிலை பற்றி குறிப்பிடுகையில் “நாம் அடிப்படையில் எருக்கலம்பிட்டியில் தான் வசித்து வந்தோம்.
எமது குடும்பத்தில் ஒவ்வொரு பிள்ளையும் தாயின் வயிற்றில் தரித்த பின்னர் பிரசவத்திற்காக இன்னும் 40 நாட்கள் இருக்கின்றன என்ற நிலை வந்தால் எமது தகப்பன் எமது தாயை நாச்சியாதீவுக்கு அழைத்துச் செல்வார்.
அங்கு தான் நாம் ஒவ்வொருவரும் பிறந்தோம். எனவே எமது பிறந்தகம் நாச்சியாதீவு தான் ” எனக் கூறுகிறார்.

ஜவாஹிர் அவர்கள் நாச்சியாதீவில் பிறந்தது மட்டுமன்றி அதே ஊரின் இக்பால் மகா வித்தியாலயத்தில் இரண்டாம் தரம் வரை படித்தார். பின்னர் க.பொ.த.(சா/த) வரை Erukkalampiddy Muslim Madhya Maha Vidyalaya த்தில் கற்ற அவர், தனது க.பொ.த.(உ/த) கல்வியை யாழ்ப்பாணம் Sri Skandavarodaya College லும் பெற்றார். பின்னர் அவர் Bachelor of Mechanical Engineering Degree யையும் Master of Science in Mechanical Engineering ஐயும் மாஸ்கோவில் உள்ள Patrice Lumumba University லும் பெற்றார்.

ஜவாஹிர் அவர்கள் அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் அமைந்துள்ள New South Wakes University ல் Mechanical Engineering எனும் துறையில் தனது கலாநிதி(PhD) கற்கை நெறியை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் அவர் அவுஸ்திரேலிய நாட்டின் Wollongong University இல் Mechanical Engineering துறை விரிவுரையாளராக கடமையாற்றிமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது அவர் ஐக்கிய அமெரிக்காவின் University of Kentucky ல் பேராசிரியராக உள்ளார்.

ஜவாஹிர் அவர்கள் பொறியியலாளராக பட்டம் பெற்ற பின்னர் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையிலும் National Engineering Research and Development Centre (NERD) ல் ஆய்வுக்கான பொறியியலாகவும் கடமைபுரிந்து நாட்டுக்கான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் பேராசிரியர் ஜவாஹிர் அவர்களது குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது என்பதும் அனுராதபுரம், மன்னார் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் உரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...