சமையல் எரிவாயு விலை இன்று அதிகரிக்கும் சாத்தியம்?

Date:

சமையல் எரிவாயு விலை இன்று அதிக விகிதத்தால் அதிகரிக்கப்படலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், புதிய விலை தொடர்பில் இன்று முற்பகல் அறிவிக்கப்படுமெனவும் உலக சந்தையில் எரிவாயுவின் விலை சுமார் 105 டொலராக அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயுன் நிறுவனத் தலைவர் முஜித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக்காலங்களை விட அதிகமான விலை அதிகரிப்பாக இது அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, கடந்த மாதம் 4ஆம் திகதியளவில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு 2982 ரூபாயாக அறிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...