அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவையற்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவைப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையை சீர்குலைத்து ராஜபக்சவை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை தயாரிக்கும் நோக்கில், 2018 ஆம் ஆண்டு உயர் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே, ISIS-உடன் இணைந்த குண்டுதாரிகள் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாக மௌலானா வெளிப்படுத்தியுள்ளார்.