2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இம்முறை மருத்துவ பீடத்திற்காக 40 பேர் தெரிவாகியுள்ளனர். இதில் 30க்கும் அதிகமானவர்கள் பெண்களாவர்.
அதற்கமைய 12 பேர் அதி திறமை சித்திகளைப் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
கடந்த வருட உள்ளீர்ப்புக்கான கோட்டா 28ஆக இருந்தது அதன் அடிப்படையில இம்முறை 40 பேர் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
திருகோணமலை வலயத்திற்குட்பட்ட ஸ்ரீசண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து 7 பேரும், உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இருந்து 4 பேரும், புனித மரியாள் கல்லூரியில் இருந்து 2 பேரும், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இருந்து 1 மாணவனும், மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் இருந்து 1 மாணவியும், ஸாஹிரா கல்லூரியில் இருந்து 3 பேரும் தெரிவாகியுள்ளதுடன், கிண்ணியா வலயத்தில் 14 பேரும், கந்தளாய் வலயத்தில் 1 மாணவியும், மூதூர் வலயத்தில் மூதூர் மத்திய கல்லூரியில் இருந்து ஒருவரும், பிரத்தியேக பரீட்சாத்திகள் 2பேரும், ஏனைய வலயத்தில் இருந்து மூவரும் தெரிவாகியுள்ளனர்.
கிண்ணியா வலயத்தில் ஒருவர் MLDக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அடுத்த 41வது நிலையில் இருக்கின்ற புனித மரியாள் கல்லூரி மாணவிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.
அத்துடன் கோட்டாவின் எண்ணிக்கை 29ஆக அதிகரிக்கப்படுமானால் 42வது நிலையில் உள்ள ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த வருடம் மருத்துவபீடத்திற்கு 10 ஆண்களும் 30 பெண்களும் தெரிவாகியுள்ளதோடு மேலும் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திருகோணமலையில் இருந்து மருத்துவ பீடத்திற்காக 15 தமிழ் மாணவர்களும், 20 முஸ்லிம் மாணவர்களும், 2 சிங்கள மாணவர்களும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.