பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய சந்தேகங்களுடன் கூடிய ஆவணப்படம் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அல்லது அவர்களின் உறவினர்களுக்கு எவ்வித நீதியையும் பெற்றுக்கொடுக்காது இந்தியன் டிபென்ஸ் ரிவிவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Debunking Channel 4 (How RAW and SIS) work together to prevent Easter attack in Sri Lanka என்ற தலைப்பில் அந்த இணையத்தளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் செனல் 4 ஆவணப்படம் இலங்கைக்குள் இஸ்லாமிய அடிப்படை கொள்கை இருப்பதை நிராகரிக்கும் மோசமான முயற்சி எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தின் ஊடாக இந்திய துணை கண்டத்தில் இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகளை கண்டுபிடிக்க கஷ்டப்பட்ட இந்திய மற்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவுகளுக்கு அவகௌரவம் நடந்துள்ளது.
ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களின் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் ஊழல் நிறைந்த உறவினர் உபசரிப்பை விமர்சித்தது உண்மையாக இருக்கலாம்.
ராஜபக்சவினர் ஈஸ்டர் தாக்குதலின் ஒரு அங்கம் என காட்டும் செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படமானது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இருப்பை நிராகரிக்கும் மோசமான முயற்சி எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.