‘ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றும் தேவையில்லை’

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான விசாரணை இலங்கைக்கு அவசியமில்லை என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு மற்றும் உடலகம் ஆணைக்குழு என்பன சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்தை நாடவேண்டிய அவசியமில்லை என சட்டத்தரணி சரத் கோன்கஹகே சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் சேனல் 4 புலம்பெயர் நாடுகளின் உதவியுடன் இலங்கை மற்றும் இலங்கையர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதற்காக இதனைச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு முறையும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நடைபெறும் போது இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதேபோன்று இம்முறையும் சேனல் 4 அவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...