பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Date:

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

WWW.UGC.AC.LK என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும், அதற்காக ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர  உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 04ஆம் திகதி வெளியிடப்பட்டன.

263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும், பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...