உலகை உலுக்கும் லிபியா பேரழிவு: கடலுக்குள் புதைந்த மக்கள்: 20,000 பேர் பலியா?

Date:

லிபியாவில் பெரும் சுனாமி போல ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொரோக்காவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 3,000 பேர் வரை பலியாகினர், 10000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஒட்டுமொத்த உலகமும் மொரோக்காவின் பேரழிவில் அதிர்ந்து போயிருந்தது.

இந்நிலையில் லிபியாவில் டேனியல் புயல் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. டேனியல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை 2 அணைகளை துவம்சம் செய்தது.

இந்த அணைகள் உடைந்த போது பெருவெள்ளமானது சுனாமி எனும் ஆழிப்பேரலையை விட பல மடங்கு அதிவேகமாக நகரங்களை காவு கொண்டது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கிய டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் நகரங்கள் அடையாளமே தெரியாமல் அழிந்து போயின.

லிபியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 6,000.

மேலும் 10,000 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. பெருவெள்ள ஆறானது மனிதர்களை அப்படியே வாரி சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் வீசியதாம். இதனால் டெர்னா நகரை ஒட்டிய கடலுக்குள் தேடும் இடமெல்லாம் மனித உடல்களாக சிதறி கிடக்கிறது என அதிருகின்றனர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்.

லிபியாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து போட்டி அரசாங்கங்கள் நடைபெறுகின்றன. இதனால் லிபியா மீட்பு பணியில் சர்வதேச நாடுகளின் உதவிகள் சென்றடைவதில் சிக்கல் தொடருகிறது. நமது இந்தியாவும் லிபியா மீட்புப் பணிகளில் உதவுவதாக உறுதி அளித்துள்ளது.

மேலும் லிபியாவில் ஐநா சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றன, ஆனால் வெளிநாடுகளில் இருந்து மீட்பு பணிக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருவதன் மூலமே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழுமை அடையச் செய்ய முடியும் என்கிற ஆதங்கத்தையும் தன்னார்வலர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...