Asia Cup 2023: இன்று இறுதிப்போட்டி வெற்றிவாகை சூடப்போகும் அணி எது?

Date:

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

16 ஆவது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் கடந்த ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமானதுடன், தொடரின் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்றன அதன்படி இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் 8ஆவது தடவையாக மோதவுள்ளன. இதுவரையில் ஆசிய கிண்ணத்தை இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் வென்றுள்ளன.

இதேவேளை, இன்றைய போட்டியிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷன உபாதை காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சஹான் ஆரச்சிகே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன், உபாதை காரணமாக இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இன்று விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய போட்டிக்கான அனுமதிச் சீட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால், குறித்த அனுமதிச் சீட்டு விற்பனைக்காக வித்யா மாவத்தை மற்றும் ஆர். பிரேமதாச மைதானத்திற்கு அருகில் திறக்கப்பட்ட விற்பனை கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...