இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண தொடரின் இறுதி போட்டியின் நேரடி ஒளிபரப்பை இரண்டு மாபெரும் திரையில் இலவசமாக பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த போட்டியை காலி முகத்திடல் மற்றும் பி.டி.சிறீசேனா மைதானத்தில் ரசிகர்கள் மாபெரும் திரையில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறுதிப்போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.