இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: 3 பலஸ்தீனர்கள் பலி- 30 பேர் காயம்

Date:

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை  ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில், இஸ்ரேல் இராணுவம் டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜெனின் அகதிகள் முகாமில் தேடுதல் வேட்டையில் இராணுவம் ஈடுபட்டது.

அப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் டிரோன்கள் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை” என்றார்.

பலஸ்தீனத்தின் ரமல்லா பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம், மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட இரண்டு குழுக்கள் இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக கடுமையான சண்டையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன.

ஆனால், சண்டை குறித்து முழு விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டது. முன்னதாக, இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்திற்கும் இடையிலான பாதசாரிகள் பயன்படுத்தும் பாதையை இஸ்ரேல் இராணுவம் மூடியதால் 25 வயது பலஸ்தீனர், காசா முனையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது இஸ்ரேல் குண்டுக்கு பலியானார்.

மேற்கு கரையில் அடிக்கடி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், ஒன்றரை வருடங்களாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நடந்த சமீபத்திய வன்முறை இதுவாகும்.

Popular

More like this
Related

காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான...

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆவணங்கள் திரட்டும் நடவடிக்கை

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1939- 2026 வரையான காலப்பகுதியில்...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...