வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Date:

வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் நேற்று (22 ) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

ஓமந்தையில் வெதுப்பகம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேரூந்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற சி. தினேசன் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...