அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபிஉல் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு அவர்களது வாழ்வின் முன்மாதிரிகளை பிரதிபலிக்கும் வகையில் தங்களது பள்ளிவாசலினை மையப்படுத்தி பின்வரும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
1. மர நடுகையினை மேற்கொள்ளல்.
2. இரத்ததானம் வழங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்தல்.
3. வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்குதல்.
4. ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
5. நபி (ஸல்) அவர்களது முன்மாதிரிகளை பிரதிபலிக்கும் வகையில் ஏனைய பொது விடயங்களை மேற்கொள்ளல்.