சுகாதார அமைச்சுக்கு முன்பாக நாளை தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Date:

சுகாதார அமைச்சுக்கு முன்பாக நாளை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தாதியர்களின் யாப்பில் இரகசியமாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த போராட்டத்தை தாதியர் சங்கத்தினர் மேற்கொள்ள உள்ளனர்.

இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மெடிவத்த கருத்து தெரிவிக்கையில்,

தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய நிலையில், அதிகாரிகள் தாதியர் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வரைவை இரகசியமாக தயாரித்துள்ளனர். அந்த நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாட்டின் சுகாதார அமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...