செப்டம்பர் 23 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் 93 ஆவது தேசிய தினம் இலங்கையில் நேற்று முன்தினம் (25) கோல்பேஸ் ஹோட்டலில் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
சவூதி அரேபியாவின் 2030 அபிவிருத்தி இலக்குகளை குறிக்கும் வகையில் ‘கனவு காண்போம் சாதிப்போம்’ என்ற தொனிப் பொருளில் இவ்வருடத்துக்கான தேசிய தின நிகழ்வுகள் நடைபெற்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களும் முன்னாள் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் நடைபெற்ற தேசிய தின நிகழ்வில் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.