எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைகிறேன், மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.
பெண் ஒருவருடன் உடலுறவு கொண்டபோது, அவருக்கு தெரியாமல் ஆணுறையை அகற்றிய குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய சிட்னி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தனுஷ்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது.
நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது.எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.