LECO நிறுவன மின் கட்டணத்தில் புதிய வரி இணைப்பு!

Date:

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும், அடுத்த மாதம் வாடிக்கையாளர் பெறும் மின் கட்டண பட்டியலில் புதிய வரியும் உள்ளடக்கப்படும் எனவும் மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார சபையால் வழங்கப்படும் மின்சார கட்டண பட்டியல்களில் குறித்த வரி இதற்கு முன்னர் இருந்தே சேர்க்கப்பட்டிருந்த நிலையில்,  சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் காணப்பட்ட குறைப்பாடு  காரணமாக, அது லெகோ மின்சார பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை.

லெகோ அல்லது இலங்கை மின்சார தனியார் நிறுவனம் சுமார் 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...