எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அறிவித்தல்!

Date:

விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

விலை சூத்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டு வந்தது.

எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலை திருத்தம் இன்று இடம்பெறாததால் நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

விலை சூத்திரத்தின்படி, கடந்த மாதம் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.

இதேவேளை, இந்த வருடத்திற்கான எரிவாயு விலை திருத்தமும் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...