மக்களின் மின் கட்டணங்களை செலுத்த முன்வரும் இராஜாங்க அமைச்சர்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களது மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்வந்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வில் நிலுவையாக இருந்த மின்சார கட்டணத்தை சனத் நிசாந்த செலுத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், சனத் நிஷாந்த அமைப்பினால் இந்த மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் தங்களது மின்சார பட்டியலின் புகைப்படம் ஒன்றை 0777449492 என்ற whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வைக்க அல்லது 032 2259130 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கட்டண விபரங்களை தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...