பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் இன்றுடன் நிறைவு!

Date:

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2022/2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை இன்றுடன் முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

14.09.2023 முதல் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

குறித்த விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை மூலம் தங்களது விண்ணப்பங்களை https://admission.ugc.ac.lk/#/ இந்த இணைய முகவரியூடாக பதிவு செய்து கொள்ள முடியும்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், 263,933 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், 84 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற 166,938 பேரில் 149,487 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 17,451 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

இம்முறை 17 பல்கலைக்கழகங்களுக்கு 43,209 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான அனைத்து விடயங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.

கீழ்காணும் லிங்கின் ஊடாக விண்ணப்ப கையேட்டை பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். 👇

https://eugc.ac.lk/ugc_handbook/

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...