காசிம் நகர் குச்சவெளி 3ஐ சேர்ந்த அப்துல் கரீம் ஹக்குல் முபீன் மற்றும் ஹம்சா நஜ்மியா ஆகியோரின் செல்வப் புதல்வியான ஹஸ்மத் பானு தனது 13 ஆவது வயதில் ஆறு மாத காலத்தில் முழுக் குர்ஆனையும் முறையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
புத்தளம், மதுரங்குளி விருதோடையில் அமைந்திருக்கும் அல் ஜாமியத்துல் அஸீஸியா அரபுக்கல்லூரியின் ஆன்மீகத் தலைவரும் பன்னூல் ஆசிரியருமான அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா அஷ்ஷெய்யத் அப்துல் அஸீஸ் மெளலானா அவர்களின் தலைமையில், அல் ஹாபிழ் அல் ஆலிம் முஹம்மது ஆரிப் (அல் அஸீஸீ) மற்றும் அல் ‘ஹாபிழா அல் ஆலிமா தஸ்லிமா பர்வீன் (அல் அஸீஸியா ஆகிய இருவர்களின் சிறப்பான நேரடி வழிகாட்டுதலின் கீழ் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.
இச்சாதனையைக் கெளரவிக்கும் முகமாக அம்மாணவி இலவசமாக புனித உம்ரா செல்வதற்கும் கல்லூரி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.