இன்றைய வானிலை அறிவிப்பு: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

Date:

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இவ்வாறு சிவப்பு நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நில்வலா கங்கை, களுகங்கை, கிங்கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சில பிரதேசங்களில் நீர் மட்டம் சிறிதளவு குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், நில்வலா கங்கையின் கரையோர மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட சிவப்பு அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...