ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெராத் நகருக்கு அருகே ஜென்டா ஜான் மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5ஆகவும், 2வது நிலநடுக்கம் 6.3ஆகவும் பதிவானது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 320 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.