தம்மீதான ஆக்கிரமிப்புக்கெதிராக பலஸ்தீன ஹமாஸின் கஸ்ஸாம் இராணுவப் பிரிவு மேற்கொண்ட தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இலங்கையர் ஒருவரும் காயமடைந்திருப்பதாக இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்அவிவிலும் ரமல்லாவிலும் உள்ள இலங்கையின் உயர் அதிகாரிகளால் நிலைமை உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுடன் நெருங்கிய தொடர்பினை அவர்கள் பேணி வருவதாகவும் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.