மீட்டியாகொடவில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு!

Date:

மீட்டியாகொட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீட்டியாகொட – தெல்வத்த பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிழலுலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, விசேட அதிரடி படையினர் குறித்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் விசேட அதிரடி படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, விசேட அதிரடி படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த நபர், அண்மையில் காலி, கராகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தின்  சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...