“உங்களையும் ஒருநாள் சுட்டு வீழ்த்துவர்” : இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை

Date:

காசா மீது  இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“நீங்களும் ஒருநாள் கொல்லப்படுவீர்கள்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்படும் மூர்க்கமான தாக்குதலால் அப்பாவி பொதுமக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் நசீப் இல்மாஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிப்பிட்டு “ஒருநாள் உங்களையும் சுட்டு வீழ்த்துவார்கள். அப்போது நீங்களும் இறப்பீர்கள்” என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

இத்துடன் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்த வீடியோவைப் பகிர்ந்து துருக்கி தன் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.

இஸ்ரேல் மீது துருக்கி, ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் ஏற்கெனவே கடும் விமர்சனங்களை வைத்து வருகிறன.

காசா பகுதிக்கு தண்ணீர், மின்சாரத்தை துண்டித்தது, பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதலை தொடுத்தது, உலகமே தடை செய்த பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியது என இஸ்ரேல் போர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தன.

அதேபோல துருக்கி பலஸ்தீனத்தின் போராளிகளுக்கு உதவுவதாக இஸ்ரேல் விமர்சித்திருந்தது. இப்படி இருக்கையில் துருக்கி அமைச்சர் ஒருவர் நேரடியாக இஸ்ரேல் அதிபருக்கு மிரட்டல் விடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...