தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு நியமனம்!

Date:

2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக 2518 மாணவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நாட்டில் நிலவி வரும் நிதி நிலையற்ற தன்மை காரணமாக ஆரம்ப கட்டத்தில் 1000 மாணவர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்க திறைசேரி தீர்மானித்திருந்தது.

பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அரசிடம் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசாங்க தாதியர் சங்கம் தலையிட்டு இது தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு கண்டது.

அரசாங்க தாதியர் சங்கம் சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியிடம் இது தொடர்பிலான விடையங்களை முன்வைத்ததன் விளைவாக, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு அனைவருக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...