காசா மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதிக்கு செல்லக்கூடிய மின்சாரம், குடிநீர் மற்றும் எரிபொருள் இணைப்பையும் துண்டித்துள்ளது.
இந்நிலையில் காசாவுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல மற்ற நாடுகள் உதவ வேண்டும் என எகிப்து எதிர்பார்த்திருக்கிறது.
தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 3,000ஐ நெருங்கி வருகிறது. அதேபோல 4,000க்கும் அதிமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு படை செல்லக்கூடிய மின்சாரம், குடிநீர் மற்றும் எரிபொருள் இணைப்பையும் துண்டித்துள்ளதால் காசா முழுமையாக இருளில் மூழ்கியுள்ளது.
மின்சாரம் இல்லாததால் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. மறுபுறம் எரிபொருள் இல்லாததால் ஆம்புலன்ஸ் சேவையை கூட பயன்படுத்த முடியவில்லை.
மேலும் உதவி பொருட்களை எடுத்து வரும் வாகனங்கள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால் எகிப்தின் உதவி பொருட்கள் கொண்டு வந்த 70 லாரிகள் காசா எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மருந்துகள், குடிநீர், எரிபொருள், உணவு போன்றவை இந்த லாரிகளில் இருக்கின்றன. இதனை காசாவுக்கு அருகே 75 கி.மீ தொலைவில் உள்ள எல் அரிஷ் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தால் போதும்.
அங்கிருந்து எப்படியாவது காசாவுக்குள் இதை கொண்டு சென்றுவிடலாம். ஆனால் இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் உதவி பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் மீதும் தாக்குதல்களை தொடுத்திருக்கிறது.
எனவே தன்னுடன் மற்ற நாடுகளும் உதவி பொருட்களை அனுப்பி வைத்தால்தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாமல் இருக்கும் என எகிப்து நம்புகிறது.