இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை ஒதுக்கியுள்ளது.
இலங்கை அரசாங்கம் 20,000 அமெரிக்க டொலர்களையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 10,000 அமெரிக்க டொலர்களையும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காகவும் ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் ஒதுக்கியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போரால் காசாவில் உள்ள பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்களும் உயிரிழந்துள்ளனர்.
போரில் சிக்குண்டுள்ள இரண்டு இலங்கையர்கள் இன்னமும் கிடைக்கவில்லை.
யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் பட்டியலை இஸ்ரேல் வெளியுற அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் சுமார் 8,000 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் முதியோர் இல்லங்களில் பராமரிப்பாளர்களாக உள்ளனர்.
காசா பகுதி மற்றும் லெபனான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவினாலும், நாட்டின் பிற பகுதிகளில் இயல்பு நிலை நீடிப்பதாக இஸ்ரேல் தூதுவர் மேலும் கூறியுள்ளார்.