நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் தேர்தல் முறைமை திருத்தம் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, இது எனது நோக்கமல்ல. அரசாங்கத்தினதும் நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பாகுமென தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கான யோசனையை நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்ததுடன், இதனால் நாட்டில் பல்வேறு கருத்தாடல்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், 160 உறுப்பினர்களை தொகுதிவாரி முறையிலும் எஞ்சிய 65 உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் தெரிவு செய்வதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்றக் குழு ஒற்றை அமைப்பதற்கும் இந்த யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களது யோசனைகளையும் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.