பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார்.
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என அவர் பெற்றோரை வலியுறுத்துகின்றார்.
“இன்றைய நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் பரவி வருகிறது. கண்கள் சிவத்தல், பார்வை மங்கல், கண்ணீர், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளை நாம் காண்கிறோம்.
இது மிக விரைவாக பரவும் என்பதால் இதை வைரஸ் காய்ச்சலாக பார்க்கிறோம். குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதால், அவர்களுக்கு இடையே தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த அறிகுறிகளுடன், சில நேரங்களில் மேல் சுவாசக் குழாயில் அது இருமல் “சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் வரலாம்.
அப்படி ஒரு நிலை இருந்தால், குழந்தையை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள். குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கோ, முன்பள்ளிக்கோ அனுப்பாதீர்கள். மற்ற குழந்தைகளுக்கு தொற்று ஏற்படலாம்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.