வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பேஜஸ் புத்தக இல்லம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை இணைந்து நடத்தும் இவ்வருடத்துக்கான புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கில் நடைபெறவுள்ளது.
4ஆவது வருடமாகத் தொடரும் இப்புத்தகக் கண்காட்சியில், இணை நிகழ்வுகளாக நூல் அறிமுகங்கள் மலையகம் 200 தொடர்பான கலந்துரையாடல் அரபு எழுத்தணிக் கலைப்பயிற்சி போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.