மரக்கறிகளின் விலைகள் உயர்வு!

Date:

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை 30 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.

தற்போது ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 400 முதல் 420 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 முதல் 500 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது.

காய்கறி உற்பத்தி குறைவதால் விலைகள் மேலும் உயரலாம் என பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவரை, முட்டைக்கோஸ், தக்காளி போன்ற மரகறிகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் அந்த காய்கறிகளின் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...