அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 எனும் துரித இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது.
அத்துடன், அரிசியினை பதுக்கி வைப்பவர்கள் தொடர்பிலும் அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
அரிசிக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் கண்டறியும் நடவடிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்துள்ளது.